இணையவழி கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு முறையற்ற வகையிலான புகைப்படங்களை அனுப்பிய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் பிடிக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு முறையற்ற வகையில் புகைப் படங்களை அனுப்பி அதன் பின்னர் அவர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தன்னை சந்திக்குமாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்தேக நபர் மீது மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் சென்று காவல் துறையினருக்கு அளித்த முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.



