இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவும் ஸிகா வைரஸ் தொற்றுடன் நபர் ஒருவர் இலங்கை வந்ததால் இந்த வைரஸ் பரவல் அடைவதற்கான சாத்தியம் உள்ளது.
அத்துடன் கேரளாவில் நுளம்புகள் மூலம் தற்போது பரவி வரும் ஸிகா வைரஸ் தொற்றுடன் 14 பேர்அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் கேரள மாநிலத்தில் இருந்து ஏதாவது ஒருவர் இலங்கை வந்தால் அவர் ஸிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காணவரா என்பது தொடர்பில் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காய்ச்சல் கண் சிவத்தல் உடல் உளைச்சல் உள்ளிட்டவை இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
ஆகவே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்கள் தொடர்பில் அரசாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



