நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் அச்சுறுத்தல் காரணத்தினால் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.
இருப்பினும் வாகனங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு திருமண வைபவங்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மண்டபம் கொள்வனவில் 25% சதவீதமானோருடன் மாத்திரம் நடத்த முடியும்.
அதாவது அதிகபட்சமாக 150 பேருடன் மாத்திரம் திருமண வைபவங்களை நடத்த முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
ஏற்கனவே 5-19 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகளை நீக்கப் பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



