ஒரு தொகை பணத்துடன் இரண்டு நபர்கள் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர்கள் இருவரும் அத்துருகிரிய பகுதியில் 13.5 மில்லியன் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் மகிழுந்து ஒன்றில் பயணித்த வேளையிலே இருவரும் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமாக பெறப்பட்டதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



