முழுமையாக திறக்கப்படவுள்ள இலங்கை!

0

நாட்டை முழுமையாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் திறக்க கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதே குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தற்போது உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொவிட் நோயினை தடுப்பதற்கு தடுப்பூசிகளை தீர்வாகவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை மகிழ்ச்சி அடையும் வகையில் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன.

அவற்றை மக்களுக்கு செலுத்துவதன் மூலம் நாட்டை செப்டம்பர் மாதம் முழுமையாக திறக்க முடியும் என குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டை திறக்காவிட்டால் பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply