கடந்த சில நாட்களுக்கு முன்பு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்ட தேரர் என்ற சிங்கம் அதிலிருந்து குணமடைந்து மீண்டும் நியூமோனியா காய்ச்சலினால் தற்போது பீடிக்கப்பட்டுள்ளதாக வன வளத்துறை இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா தெரிவித்திருந்தார்.
இதற்கமைய குறித்த சிங்கத்திற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் அதன் உடல்நிலை குறித்து தற்போதைக்கு எதையும் கூறமுடியாது இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.



