தற்போது ஆடம்பர பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்துவதற்கான ஆய்வினை மத்திய வங்கி மேற்கொண்டுள்ள போதும் அது குறித்து இதுவரையில் எந்த விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குளிர்சாதனம் தொலைபேசி தொலைக்காட்சிகள் என்பவற்றுடன் வாசனை திரவியங்களுக்கும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்த விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் இறக்குமதி கட்டப்படுத்துவதன் ஊடாகவே நாணய பெறுமதியை நிலையாக பேண முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக வாகன இறக்குமதி தடை கூட விரும்பி அமல்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.



