வெந்தயத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

0


Fenugreek can give you a healthy life
வெந்தயத்தை கிரேக்கத்தில், ட்ரைகோனல் ஃபீனம் கிரேஸம் என்று அழைப்பார்கள். வெந்தயத்தினுடைய பூ முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். அதனால், அப்பெயரில் வழங்கப்பட்டது. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன.


வெந்தயத்தை கசப்பாக இருக்கிறது என ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், வெந்தயத்தை மிஞ்சக்கூடிய மருந்தே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதில், அதிக அளவிலான மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கின்றன.


வெந்தயத்தின் இலை, விதை என எல்லாவற்றையும் தென்னிந்திய சமையலில் பார்க்க முடியும். குறிப்பாக, தமிழக சமையலில் வெந்தயத்தின் பயன்பாடு மிக அதிகமாகவே இருக்கும்.


கீரை வகைகளிலேயே மிகவும் குளிர்ச்சி பொருந்தியது வெந்தயக்கீரை தான். உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.


வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும்.

வெந்தயக்கீரையில், 65 சதவீதம் புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் வெந்தயக்கீரையில், 86.1 சதவீதம் நீர்ச்சத்தும் 4.4 சதவீதம் புரதச்சத்தும் கிடைக்கின்றன. ஆனால், மிக குறைந்த அளவு கலோரிகளையே கொண்டது.


ஒரு கப் வெந்தயக்கீரையில், 49 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.
வெந்தயக்கீரையில் பாசிப்பருப்பைச் சேர்த்து சாப்பிட்டால், கல்லீரல் பலப்படும். வாய்ப்புண் வராமல் தடுக்கும்.


வெந்தயக்கீரையில், வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. அது மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வயிற்றுவலி, இடுப்பு வலியைத் தீர்க்கக்கூடிய அருமருந்தாக, வெந்தயக்கீரை பயன்படுகிறது.


தீக்காயங்களுக்கு வெந்தயக்கீரையை அரைத்து பற்று போடலாம்.

குறிப்பிட்ட சீசனில் அதிகமாகக் கிடைக்கும் இந்த கீரையை, நன்கு வெயிலில் உலர்த்தி, எடுத்து வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply