உப்பு சாப்பிடறது உடம்புக்கு கேடுன்னு யாரு சொன்னா?… இதப்படிங்க உங்களுக்கே புரியும்..!

0


Health benefits of common salt
நம்மோட சாப்பாட்டுல ஒரு ஸ்பூன் உப்பு தானே எல்லா மாயமும் செய்யுது. அந்த உப்பு தான் நம்முடைய உணவின் ஒட்டுமொத்த சுவைக்கு காரணமாக இருக்கிறது. கூடவோ குறையவோ இருந்தால் அந்த உணவின் சுவையை முழுமையாக நம்மால் உணர முடியாது.


உணவில் உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. உப்பு அதிகமாகச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும், உப்புச்சத்து கூடிவிடும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.


உப்பு அதிகமாக சாப்பிட்டால் ரத்த அழுத்தம் உண்டாகும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்தால் தேவையில்லாத ஆரோக்கியக் கோளாறுகள் உண்டாகும்.


குறிப்பாக, வாயுத்தொல்லை, அல்சர் என்னும் வயிற்றுப்புண், தசைப்பிடிப்பு ஆகியவை உண்டாகும். அதனால் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்குமே ஒழிய அது வெறும் உப்பினால் அல்ல.


எல்லா வயதினருக்கும் உப்பு ஒரே அளவு தான் தேவை. உடலில் உள்ள ரத்தத்துக்கு மிக முக்கியமான தேவைகளுள் ஒன்று உப்பு. ரத்தத்துக்கு ஊட்டச்சத்துக்களையும் உப்பு கொடுக்கிறது.


உப்பு வெறுமனே உப்பாக நேரடியாக எடுத்துக்கொண்டால் தான் என்றில்லை. அதை வேறுவேறு வடிவில் உடலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.


குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது உப்பை குறைவாக எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இயல்பாகவே உப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.


அதனால் பர்கர், ரெட் மீட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது உப்பை கொஞ்சம் குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.


உப்பை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தால் அதை நிறைவு செய்யும் வகையில் மிளகு, சீரகம், மஞ்சள் போன் மசாலாக்களை சேர்த்துக்கொள்ளலாம். அது உப்பின் தேவையை கொஞ்சம் நிவர்த்தி செய்யும்.


இளம்வயதினர் உப்பைப் பற்றி பெரிதும் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்வதுண்டு. அதுவும் உண்மையல்ல. எல்லா வயதினருக்குமே உப்பின் தேவை ஒரே அளவு தான். இளம் வயதோ அல்லது வயதானவரோ யாராக இருந்தாலும் உப்பின் அளவு மிக அதிகமானால் இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கும். இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகயும் அதிகம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply