மு-க ஸ்டாலினால் வழங்கப்பட்ட வீடு மற்றும் 5 லட்சம் ரூபாய் நிதி.

0

இந்தியாவின் முதல் அமைச்சர் மு -க ஸ்டாலின் அவர்கள், பழம்பெரும் நடிகரும் கர்நாடக சங்கீதப் பாடகருமாக திகழ்ந்த எம். கே. தியாகராஜா பாகவதரின் மகள்வழி பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளனர்.

இதற்கமைய இவர்களின் வறுமை நிலையினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒன்றினையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

குறித்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக இன்றைய தினம் தலைமை செயலகத்தில் எம். கே. தியாகராஜா பாகவதரின் மகள் வழிப் பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து அவர்களுக்குரிய ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புக்கான ஆணையினையும் 5 லட்சம் ரூபாய் நிதி உதவியையும் அமைச்சர் நேரில் வழங்கி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply