மிகவும் விசித்திரமான முறையில் தங்க ஆபரணதிருட்டில் ஈடுபட்ட குழுவினர் புறக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய சிறுமி ஒருவரை ஈடுபடுத்தி குறித்த குழுவினர் இந்த திருட்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நகையகங்கள் பலவற்றிலும் இவர்களினால் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் 46 மற்றும் 23 வயதான பெண்கள் இருவரும் 79 வயதான ஆண் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



