தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா?- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.

0

தற்போது தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது.

இதற்கமைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஊரடங்கு உத்தரவை 5 ஆம் திகதி வரை போடுவதற்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி மாவட்டங்களை மூன்று வகையாகப் பிரித்து வெவ்வேறு வகையான தளர்வுகளை அறிவித்திருந்தார்.

அவற்றுள் முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களும்

இரண்டாம் வகையில் அரியலூர்,கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும்

மூன்றாம் வகையில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் அடங்குகின்றன.

இந்நிலையில் 5ம் திகதி இந்த ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் அதனைத் தொடர்ந்து நீடிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் இன்று நடத்தி வருகின்றார்.

குறித்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply