பல கேரிக்கைகளை முன்வைத்து தாதியர் சங்கத்தினரால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் இன்றைய தினமும் தொடர்ந்து செல்கிறது.
இதற்கமைய பதவி உயர்வு மற்றும் தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் காரணத்தினால் நேற்றையதினம் வைத்திய சாலைகள் பலவற்றின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்பட்டது.
அத்துடன் வைத்திய சாலைகள் பலவற்றிற்கு சென்ற நோயாளர்கள் சிலர் பாரிய அசொகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இருப்பினும் திடீர் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



