மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

0

மன்னார்- மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை 6.15 மணிக்கு இடம்பெற்றது.

இதற்கமைய குறித்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வானது மூன்று மொழிகளிலும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை தொடர்ந்து திருச் சொரூப ஆசியும் இடம் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் பக்தர்களின் வருகையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர்கான அனுமதியும் முற்றாக மறுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply