நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதற்கமைய கொழுப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்லவா தெரிவித்துள்ளார்.
இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெள்ள காவல்துறை பிரிவு- மத்துவாகல வத்த மேற்பிரிவும்
அவ்வாறு கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவல்துறை பிரிவு, ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம், ரப்பர் வத்தை பகுதியும் இவ்வாறு தனிமை படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் நுகேகொடை காவல் துறை பிரிவு – கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவும் இதற்கிடையில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம மற்றும் மீகாவத்தை காவல் துறை பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளும், மாத்தளை மாவட்டத்தின் மஹாவெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஒரு பகுதியும் தனிமைப்படுதலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.



