நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கிறது-தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய செயற்படுபவர்களின் எண்ணிக்கை.

0

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் அனைவரும் முகக் கவசம் அணியாமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,260 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply