செல்வம் பெருகும் மகாலட்சுமிக்குரிய விரதங்கள்

0

லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர் பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.

ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், லட்சுமி விரத நாளாகும்.

ஆவணி வளர்பிறை பஞ்சமியை “மகாலட்சுமி பஞ்சமி” என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை, நான்கு நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இதற்கு, “மகாலட்சுமி நோன்பு” என்று பெயர்.

கார்த்திகை மாத பஞ்சமியை “ஸ்ரீபஞ்சமி” என்று அழைத்து, அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

ஐப்பசி மாத பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் மகாலட்சுமி பூஜை செய்வது குடும்பத்தில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கிணைத்து நமக்கு மேலும், மேலும் சிறப்பைத் தரும்.

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது அஷ்டலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் 16 செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் லட்சுமி பூஜை செய்வது, செல்வத்தைப் பெருக்கும். குறிப்பாக, அட்சய திரிதியை அன்று லட்சுமி வழிபாடு செய்வது பொன், பொருள் சேர்க்கையை விருத்தி அடையச்செய்யும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply