வியாழக்கிழமைகளில் குரு பகவானை ஏன் வணங்க வேண்டும்? வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

0

• நவகிரகங்களில் பெரும்பாலான மக்களால் அதிகமாக வணங்கப்படும் கிரகங்களில் குருபகவான் முக்கிய இடம் வகிக்கிறார்.

வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வணங்கினால், சிறந்ததொரு வாழ்வை இனிதே பெறலாம் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

• குருபகவான் மஞ்சள் நிறத்திற்கு உரியவர் என்பதனால் தமிழில் இவருக்கு ‘பொன்னன்’ என்கிற ஒரு பெயரும் உள்ளது.

முழுமையான சுப கிரகம் என்பதால் இவரின் அருள் கிடைத்தால் நன்மைகள் பல ஏற்படும். அதற்கான ஒரு சிறந்த விரதம் தான் வியாழக்கிழமை விரதம்.

• வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொண்டால் வாழ்வில் பல யோகங்கள் உண்டாகும்.

தகுந்த காலத்தில் திருமணம் நடைபெறும். குடும்ப பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரங்களில் சிறந்த செல்வ வளம் பெருகும். சிறந்த வாழ்க்கை உண்டாகும்.

• ஆகவே வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை சார்த்தி கொண்டைக்கடலை மாலை சமர்ப்பித்து குருபகவானை வணங்கி, குரு அருளைப் பெறுவோம்!.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply