அசைவம் சமைத்தால், வீட்டில் விளக்கு ஏற்றலாமா? தெரிந்து கொள்வோமா..?

0

# அசைவம் சமைத்தால், வீட்டில் கண்டிப்பாக விளக்கு ஏற்றக்கூடாது. அதுபோல அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வது கூட மகாபாவம்.

மேலும் இதில் கவனிக்க வேண்டியது, பொதுவாக அசைவம் சாப்பிடும் சமயத்தில் வீடு முழுவதும் துர்வாசனை வீசும். அதனால் நல்ல சக்திகள் வீட்டிற்கு வராது, அல்லது வர முடியாமல் வெளியில் நிற்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை.

# தோஷம் உண்டாகும்:

பொதுவாகவே வீட்டில் விளக்கு ஏற்றினால் நல்ல தெய்வ சக்திகளை வா என்று அழைப்பதற்கான சமிஞ்சை. அசைவம் சமைத்து வைத்த வீட்டில் விளக்கு ஏற்றினால் நாம் நல்ல சக்திகளை வா என்று அழைத்து விட்டு, உடனுக்குடன் அவமானப்படுத்தியதற்கு சமமாகும்.

இந்தப் பாவத்தால் நமக்கு பிரம்மஹத்தி தோஷத்திற்கு நிகரான தோஷம் ஏற்படும். இதன் காரணமாக பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்படும்.

# அதனால் வீட்டில் அசைவம் சமைத்த அடுத்த நாள் காலையில் வீட்டில் வீட்டை கழுவி துர்வாசனை வராத அளவிற்கு சுத்தம் செய்து,

குளித்து விட்டு ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வீட்டை நல்ல வாசனைகளுக்கு உள்ளாக்கி அதன் பிறகு விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் வரும்.

# வீட்டை கழுவும் சமயத்தில் மஞ்சள் அல்லது கல் உப்பை தண்ணீரில் போட்டு துடைத்து சுத்தம் செய்யலாம்.- Source: kalakkal


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply