கர்ப்பிணிகளுடன் தாம்பத்தியம் ஆபத்தா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

0

கர்ப்பிணி பெண்களுடன் ஆண்கள் உறவு கொள்ளலாமா என்று பல ஆண்டுகளாக பட்டிமன்றமே நடைபெற்று வருகிறது.

பெண் கர்ப்பம தரித்துவிட்டால் அவளிடம் இருந்து கணவன் தனித்து சென்றுவிட வேண்டும் என்கிற ஒரு வழக்கம் தமிழக மக்கள் மத்தியில் உண்டு. பெண் கர்ப்பம் தரித்த சில நாட்களிலேயே அவளை பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான காரணமும் இது தான். கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் தங்கள் கணவன்களுடன்சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆனால் கர்ப்ப காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உறவு கொள்வது கணவன் – மனைவி இடையே அன்பை ஆழப்படுத்தும் என்று கூறுகிறார்கள் மனோ தத்துவ நிபுணர்கள். ஆனால் உறவு மேற்கொள்ளும் காலம் மற்றும் முறை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பெண்கள் கர்ப்பம் தரித்த பிறகு 6வது வாரத்தில் இருந்து 12வது வாரம் வரை கணவன்கள் உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் கரு கலைய வாய்ப்பு அதிகம் உள்ளதால் மனைவிகளை கணவன்கள் அதற்காக நெருங்காமல் இருப்பது நல்லது. இதே போல் குழந்தை பிறப்பதற்கான காலம் கொடுக்கப்பட்டுள்ள தேதிக்கு 2 மாதங்களுக்கு முன்பிருந்த வரை கர்ப்பிணிகளை உறவுக்கு கணவன்கள் அழைக்க கூடாது.

மற்ற காலங்களில் கணவன் – மனைவி தாரளமாக உறவு கொள்ளலாம். ஆனால் உறவு கொள்ளும் முறை அதாவது பொசிசன் மிகவும் முக்கியம். ஒரு போதும் வழக்கமான முறையான பெண்களை கீழே கிடத்தி உறவு கொள்ளும் முறையை கர்ப்பிணிகளின் கணவன்கள் தவிர்க்க வேண்டும். மாறாக பெண்களை மேலே இருக்க செய்யலாம். அல்லது அமர்ந்படியே முயற்சிக்கலாம்.-Source: tamil.times


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply