சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சரியா, தவறா?

0

சனி என்றாலே எல்லோருக்கும் மனதுக்குள் கலக்கம் தான். வாழ்வில் செய்யும் தவறுகள் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் அதற் குரிய தண்டனையை நீதிதவறாமல் வழங்குவதில் சனிபகவான் சிறந்தவர். தர்மத்தை நிலைநாட்டும் கண்டிப்பு மிக்க கடவுளிடம் ஒரு பயன் இருப் பது இயற்கைதான்.

சனியைப் போல் கொடுப்பவர் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்று சொல்வார்கள் அது உண்மைதான். எள் தீபம் ஏற்றினால் சனிபகவான் எண் ணங்களை நிறைவேற்றுவார் என்று சனிக்கிழமை தோறும் சிவாலயங்களில் சனிபகவானை நோக்கி ஓடும் பக்தர்கள் நம்மில் அதிகம். ஆனால் எள் தீப வழிபாடு ஜாதகத்தில் உண்டாகும் சனி தோஷத்தைக் குறைக்காமல் அதிகப்படுத்தி அல்லல்படுத்தவே செய்யும்.

தானியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தைப் பெற்றவை என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் சனீஸ்வர கிரகத்துக்கு உகந்தது எள். எள்ளை எரிப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை அதிகரித்துவிடும்.எள் என்பது தானிய வகையைச் சேர்ந்தது. அட்சதைக்கு அரிசியைப் பயன்படுத்துவதன் மூலம் அதை புனிதமானது என்று சொல்கிறோம். அது போல் எள் தானியமும் புனிதமா னதே அதனால் அதை எரிக்கக் கூடாது.

நம் முன்னோர்கள் சனீஸ்வரனை வணங்கும்போது அவருக்குப் பிடித்த எள்ளை எரிக்காமல் எண்ணெயாக்கியே தீபமேற்றினார்கள். நமது பரி கார முறைகளும் இந்துமத சாஸ்திரங்களும் கூட எள்ளை எண்ணையாக்கி தீபமேற்ற வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறது.ஹோமக் குண்ட லத்தில் தானியங்களைத் தீயில் இட்டு எரிப்பது வழக்கம். ஆனால் அந்த தானியங்களுக்குரிய தேவதைகளின் பெயரை சொல்லி அவர்களுக்கு சேர்ப்பதால் அதில் பாதகமில்லை. ஆனால் காஞ்சி மகாபெரியவாவும் எள்ளைக் கொண்டு விளக்கேற்றாமல் எண்ணெயைக் கொண்டு விளக்கேற் றுங்கள் என்றுதான் கூறியிருக்கிறார்.

விளக்கேற்ற எத்தனை வகையான எண்ணெய்கள் உருவானாலும் எள் எண்ணெயால் ஏற்றப்படும் தீபத்துக்கு சக்தி அதிகம். எள் எண்ணெயில் மகாலஷ்மி வாசம் செய்வதாக ஐதிகம். எள் உஷ்ணமிக்கது. எள் எண்ணெய் குளிர்ச்சிதரக்கூடியது. எள்ளை மூட்டைக்கட்டி எள் எண்ணெய் விளக் கில் போட்டு தீபம் ஏற்றுவது ஆலய ஆகம விதிக்கு புறம்பானது. இது உங்கள் வேண்டுதல்களை நிராகரிப்பதோடு சனிதோஷத்தையும் அதிகப் படுத்திவிடும்.

சனீஸ்வரனை திருப்தி படைத்த சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு வைக்க வேண்டும். நைவேத்தியத்துக்கு எள் கலந்த சாதம் வைக்கலாம். அன்றைய தினம் அன்னதானம் செய்வது சனீஸ்வரனை குளிர்விக்கும்.இயலாத ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி செலவுகளைச் செய்வது சனீஸ்வர தோஷத்தைக் குறைக்கும்.

பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ மாலை சாற்றினால் சனீஸ்வரன் மகிழ்ந்து அருள் புரிவார். சனிக்கிழமைகளில் நவகிரகங்களில் இருக் கும் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். ஆஞ்சநேய வழிபாடு சனீஸ்வரனின் தாக்கத்தைக் குறைக்க செய் யும். வன்னி மரம் எங்கு இருந்தாலும் அதைச் சுற்றி வந்து வணங்கினால் சனி தோஷத்தின் தாக்கம் குறையும்.

இன்று சனிக்கிழமை சனி தோஷம் நீங்கவும், சனி பகவானின் அருளைப் பெறவும் எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். எள் தீபம் மேலும் சோதனை களை உண்டாக்கும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். – Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply