சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வேலைகள் இருக்கின்றன, திறன் குறைவாக இருக்கிறது;
இதனை சரி செய்யவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்களுக்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பல்கலைக்கழகங்கள் திட்டங்களை செயல்படுத்தவேண்டும்.
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே. வேலை கிடைக்கவில்லை என எந்த இளைஞனும் கூறக்கூடாது என்ற வகையில் அரசு செயல்படுகிறது. எனது ஆட்சிக்காலம் கல்வியின் பொற்காலமாக மாறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



