நடமாடும் காவற்துறையினரின் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவற்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சுற்றறிக்கை மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் குறித்த தகவலை அறிவித்துள்ளார்.
அத்துடன் சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும், வன்முறைச் செயல்களில் ஈடுபடவும் மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
ஆகவே குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவற்துறை மா அதிபர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் குறித்த சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.



