நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும்.
சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும்.
இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
குரல் கம்மல் நீங்கி விடும்.
தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலை முடி வேர்களில் நன்றாக அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமுடி பிரச்சனைகள் நீங்கும்.
தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும்.
தலை முடி பட்டு போல் மினுமினுப்பாக இருக்கும், மேலும் அகால நரையும் நீங்கும்.



