வர்த்தக வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீதத்தை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் உத்தரவு விடுத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான உத்தரவு சகல வர்த்தக வங்கிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற சகல வணிக வங்கிகள் மற்றும் சிறப்பு வங்கிகளுக்கு அறவிடப்படும் வருடாந்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கட்டண அதிகரிப்பு அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



