எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் உர பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட உர தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நிவாரணப் பணிகளில் எதிர்காலத்தில் உரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் 100 கிலோ கிராம் பச்சை கொழுந்துக்கு 40 கிலோ உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் இன்மையால் மரக்கறிகளின் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



