மற்றுமொரு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் ஹட்டன்- கொட்டகலை கிறிஸ்லஸ் பார்ம் தோட்டத்திலே உள்ள வீடொன்றில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இந்த விபத்தில் எரிவாயு அடுப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் எவருக்கும் எந்த விதமான காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் குறித்த எரிவாயு அடுப்பு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



