திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை இடம் மாற்றுவதற்கு தீர்மானம்.

0

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் கடும் நெருக்கடி காரணத்தால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இந்த வைத்தியசாலையை “சத்தாபுர” பிரதேசத்தைக் எடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் இந்த வைத்தியசாலை வளாகத்தில் போதிய வசதியில்லாமையினாலும் , கடல் எல்லையில் அமைந்திருப்பதாலும் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் இசையின் கலந்துரையாடலும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply