கிளிநொச்சியில் 190 பேர் அதிரடி கைது.

0

கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மதுவரி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 190 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த தகவலை மாவட்ட மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு கைதானவர்களில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 02 பேரும், கசிப்பு உடையில் வைத்திருந்த 34 பேரும், பிற நாட்டு குடி வகைகளை வைத்திருந்த 03 பேரும், கசிப்பு உற்பத்தி காரணம் வைத்திருந்ததை 03 பேரும் கைதாகியுள்ளனர்.

மேலும் கோடா வைத்திருந்த ஒருவரும், அனுமதிப்பத்திரமின்றி கள் விற்பனை செய்தமை மற்றும் உடைமையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் 147 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply