தற்போது மிகவும் ஆபத்தான கொவிட் திரிபாகக் கருதப்படும் ஒமிக்ரோன் திரிபு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்துக் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடு மீண்டும் முடக்கத்திற்கு செல்லாது இருப்பது மக்களின் கைகளிலேயே உள்ளது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாறுபாடுகள் தொடர்பாக நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் முடக்க நிலைக்கு செல்லாதிருப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.



