மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இதற்கமைய அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசியின் மேலும் 1.34 மில்லியன் டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
அத்துடன் 3,783 கிலோ எடை கொண்ட குறித்த அளவுகள் நெதர்லாந்திலிருந்து துபாய் வழியாக நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
மேலும் இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசிகள், கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் களஞ்சியசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



