மக்களின் பாதுகாப்பை கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த தடுப்பூசியை இன்று முதல் செலுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் முதற்கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்களே ஒரு தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



