கால்வாசி மதுபான போத்தல்கள் உற்பத்திக்கு தடை.

0

நாட்டில் தற்போது கால்வாசி மதுபான போத்தல்கள் உற்பத்தி செய்வதை தடை விதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைய அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர்சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் புகையிலை மற்றும் மது ஒழிப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட 72 சத வீதமானோர் கால் டாக்சி மதுபான போத்தல்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இதன் பிரகாரம் 14 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 40 சதவீதமானோரும், 31 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 35 சதவீதமானோரும், 45 க்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதமானோரும் கலந்து கொண்ட இந்த ஆய்வில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply