ஐக்கிய மக்கள் சக்தியிரால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை.

0

ஐக்கிய மக்கள் சாதியினரால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுகாதார விதிமுறைகளை கருத்தில் கொள்ளாத செய்யப்பட்டவர்கள் மற்றும் அதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சில பிரச்சனைகளை முன்னிலைப் படுத்தி, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

அவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த பேரணி காலிமுகத்திடலை சென்றடைந்தது.

மேலும் இவ்வாறு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட காவல் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

Leave a Reply