டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மம்தா பானர்ஜி.

0

மேற்கு வங்காளம், பஞ்சாப், அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்த 15 கிலோ மீட்டர் தூரம் வரை எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை,பறிமுதல், கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் குறித்த நடவடிக்கைகளை 50 கிலோ மீட்டர் தூரம் வரை மேற்கொள்ள ஏதுவாக எல்லை பாதுகாப்பு சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கமைய மம்தா பானர்ஜி அடுத்த வாரம் டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு அதிகரிப்பு விவகாரம் , மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி. எஸ். டி உள்ளிட்ட நிலுவைத் தொகை குறித்து அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மம்தா பானர்ஜி எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை டெல்லியில் இருப்பதற்கு திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply