இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
.
இதற்கமைய குறித்த சம்பவம் களுத்துறை – வெலிப்பென்ன காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த குறித்த நபர் சின்ன வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் நீண்ட காலமாக நிலவிவந்த தகராறு காரணத்தால் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சின்ன வைத்து வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படவுள்ளார்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முனெடுத்து வருகின்றனர்.



