தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களின் கட்டணம் உயர்வு.

0

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களின் கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் தெற்கு ரயில்வே நெல்லை , நாகர்கோவிலுக்கு 3 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சிறப்பு ரயில்கள் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றது.

அத்துடன் தீபாவளி சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழக்கமாக 395 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இருப்பினும் சிறப்பு ரயிலில் ரூபா 535 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ரூபாய் 140 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் ஆன்லைனில் டிக்கெட் எடுக்க 15 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply