இலங்கைக்கு கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22,771 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 68 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த பத்து மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 60,000 ஜக் கடந்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தியாவிலிருந்து 18,466 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் இவற்றை விட ஐக்கிய இராச்சியம் , ஜெர்மனி, கஸகஸ்தான்மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது



