வெல்லவாய தனமல்வில பிரதான வீதியில் கொள்கலன் ஊர்தியொன்றும், சிற்றுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவத்தில் சிற்றூர்த்தின் சாரதி
உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் வெல்லவாயவிலிருந்து தனமல்வில நோக்கி சீனி ஏற்றிச்சென்ற கொள்களன் ஊர்தியும் சிற்றுந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்துடன் சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



