தமிழகத்தில் இன்று முதல் இல்லம் தேடி கல்வி செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் பரவலடைந்து வருவதால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்தது.
இதன் காரணத்தால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அத்துடன் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்குவதற்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூபா 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
” இல்லம் தேடி கல்வி “என்ற புதிய திட்டத்தின் கீழ் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் 1 முதல் 8 வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் அளவை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே மாணவர்களின் வீடுகளில் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



