விதிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளில் மேலும் சில தளர்வுகள்.

0

கொவிட் தொற்று பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளில் மேலும் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் 25ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சுகாதார ஒழுங்குவிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு பூராகவும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு 25 ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண வைபவங்களின் போது மண்டபங்களின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது அதிகபட்சமாக நூறு பேர் கலந்து கொள்ள முடியும் என்பதுடன் திறந்த இடங்களில் ஒழுங்கு செய்யப்பட திருமண நிகழ்வுகளில் 150 பேர் வரையில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்ப இந்த நிகழ்வுகளின் போது மது பானங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply