யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய குறித்த நபர் தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அத்துடன் 40 வயதினையுடைய பொன்னுத்துரை காண்டீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு விபத்துக்குள்ளான நபரை அவசர நோயாளர் காவு வண்டி ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



