அனுராதாபுர மாவட்டத்தில் இரு புதிய மாவட்ட நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 150 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மதவாச்சி மாவட்ட நீதிமன்றம் மற்றும் 102 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கஹட்ட கஸ்திலிய மாவட்ட நீதிமன்றம் போன்றனவே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய நீதிமன்றங்களையும் நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



