சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் பயனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கி வைப்பு.

0

கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த நிகழ்வு நேற்று கந்தளாய் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

செளபாக்யா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 16 வேலைத்திட்டங்கள் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறந்த உற்பத்திசார் முன்மொழிவுகள் கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அவற்றை வழங்கக் கூடியதாக அமையும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள
தெரிவித்தார்.

செளபாக்யா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் அண்ணளவாக ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை செலவிட உள்ளது.

இதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி வருமானம் ஈட்டுகின்ற பொறிமுறையை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply