கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் முன்பு ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!

0

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் முன்னால் நேற்றைய தினம்
மதியம் 2.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டார்கள்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை கொடு,கொத்தலாவள சட்ட மூலத்தை கிழித்தெறி உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், கிழக்கு தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அதிபர்கள் சங்கம் என்பன இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சுமார் அரைமணிநேரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இப்போராட்டம் நடைபெற்றது.

சுபோதினி அறிக்கைக்கு அமைவாக தமது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என போராட்டகாரர்கள் தெரிவித்தார்கள்.

Leave a Reply