தமிழக கவர்னர் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக கவர்னர் கடந்த மாதம் 23 ஆம் திகதி டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது டெல்லி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .
அத்துடன் தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின்னர் கவர்னர் ஆர். என் ரவியை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் ஒருங்கிணைப்பாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரையும் சந்தித்தார்.
மேலும் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ரவியை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 13 ஆம் திகதி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் கவர்னர் ஆர். என் ரவி டெல்லிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
தமிழக கவர்னர் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரைச் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



