இலங்கையில் டெங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்க்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கமைய இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரையில் 21154 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும் 10 மரணங்களும் சம்பவித்துள்ளன.
இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கம் அடைவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென டெங்கு ஒழிப்பு பிரிவினர் கோரியுள்ளனர் .



