வெள்ளைப் பூண்டு மோசடியுடன் தொடர்புடைய நபர் அதிரடிக் கைது.

0

வெள்ளைப் பூண்டு மோசடி தொடர்பில் நபரொருவர் அதிரடியாக கைது செயப்படுள்ளார்.

இதற்கமைய லங்கா சதொச விற்பனை நிலையத்திலிருந்து வெள்ளைப் பூண்டு கொள்கலனை மோசடியான முறையில் கொள்வனவு செய்ததாக கூறப்படும் வர்த்தகரின் மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட சந்தேக நபர் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தபபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply