மட்டக்களப்பு- கரடியனாறு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதற்கமைய அந்தப் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமான மண் அகழ்வில் ஈடுப்பட்டிருந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



