நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் தற்போது இல்லை!

0

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான தீர்மானம் தற்போது இல்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த அறிவிப்பை தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் கடுமை ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்

மேலும் நாட்டை முடக்குவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன் நாளாந்தம் ஊழியம் பெறுபவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply